கூலி டிரெயிலரில் புதிதாக சேர்க்கப்பட்ட ஃபிளாஷ்பேக் காட்சி? திரையரங்கில் ஒரு சர்பிரைஸ்…

1 month ago 11
ARTICLE AD BOX

Author: Prasad
8 August 2025, 7:26 pm

மாஸ் டிரெயிலர்…

“கூலி” திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளிவந்தது. படத்தின் டிரெயிலர் மிகவும் அட்டகாசமாக அமைந்திருந்தது. இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவில் அதகளம் செய்து வருகிறது இத்திரைப்படம். தற்போது கேரளா மற்றும் சென்னையில் சில திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி போல் அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. 

The time has come! #Coolie bookings open across TN Today, 8 PM onwards! 😎🍿#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishgangespic.twitter.com/DlU1i0aiT3

— Sun Pictures (@sunpictures) August 8, 2025

டிரெயிலரில் சேர்க்கப்பட்ட புதிய  காட்சி…

இந்த நிலையில் “கூலி” திரைப்படத்தின் திரையரங்கு டிரெயிலர் பதிப்பில் இத்திரைப்படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சியில் இருந்து ஒரு புதிய காட்சித்துணுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் “கூலி” ஹிந்தி டிரெயிலரை திரையரங்கில் பார்த்த ஒரு ரசிகர் இந்த காட்சியை மொபைலில் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அக்காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ… 

New clip from the flashback sequence have been included in the #Coolie trailer at PVR Cinemas.pic.twitter.com/fA8mVTvF25

— Southwood (@Southwoodoffl) August 8, 2025
  • coolie trailer new version கூலி டிரெயிலரில் புதிதாக சேர்க்கப்பட்ட ஃபிளாஷ்பேக் காட்சி? திரையரங்கில் ஒரு சர்பிரைஸ்…
  • Continue Reading

    Read Entire Article