ARTICLE AD BOX
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
 இத்திரைப்படம் துறைமுகத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற Chikitu என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
என்ன காரணம்
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் “கூலி” என்ற டைட்டிலோடுதான் வெளியாகவுள்ளது. ஆனால் ஹிந்தியில் மட்டும் இத்திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஹிந்தியில் இத்திரைப்படத்திற்கு “மஜதூர்” என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று வெளியான Chikitu பாடலின் அறிவிப்பு வீடியோவில் ஹிந்தி வெர்ஷனில் இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. மஜதூர் என்றாலும் ஹிந்தியில் கூலி என்றுதான் அர்த்தமாம்.
 ஏற்கனவே அமிதாப் பச்சன் நடித்த “கூலி” என்ற திரைப்படம் அங்கு பிளாக்பஸ்டராக வெற்றிபெற்றது. அதே போல் வருண் தவானும் “கூலி” என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் நடித்துள்ளார். இதன் காரணமாக இத்திரைப்படத்தின் தலைப்பு ஹிந்தியில் மட்டும் மாற்றம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தயவு செய்து “கூலி” என்ற தலைப்பையே மறுபடியும் வைத்துவிடுங்கள் என ஹிந்தி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 
                        4 months ago
                                41
                    








                        English (US)  ·