ARTICLE AD BOX
எகிறும் எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் – ரஜினிகாந்த் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு பன்மடங்கு இருக்கிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆமிர்கான் இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
வெளிநாடுகளில் இத்திரைப்படத்தின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் 600க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன. இப்போதே “கூலி” fever தொடங்கிவிட்டதாக தெரிய வருகிறது.

ஆடியோ வெளியீட்டு விழா!
“கூலி” திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவுக்கான அறிவிப்பு நேற்று வெளிவந்தது. அதாவது வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
கூலி படத்தில் கமல்ஹாசன்?
“கூலி” திரைப்படத்தின் தொடக்கத்தில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர் இடம்பெறுவதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது அவர், “கூலி படம் எல்சியூ என்றும் கமல்ஹாசன் அதில் இடம்பெறுகிறார் என்றும் வதந்திகள் பரவி வருகிறது.

ஆனால் விக்ரம் படத்தில் ரஜினி நடிக்க முடியாது, கூலி படத்தில் கமல் நடிக்க முடியாது. இந்த கதை ரஜினிக்காக எழுதப்பட்டது, அதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க முடியாது” என பதிலளித்துள்ளார். இதன் மூலம் “கூலி” படத்தில் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் வருவதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என தெரிய வருகிறது.
