கூலி படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்… படக்குழு எடுத்த முடிவால் ரசிகர்கள் ஷாக்!!

1 month ago 46
ARTICLE AD BOX

ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்கள் உருவாகி வருகிறது.

கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிப்பில் தயாராகி வரும் கூலி படத்தின் போட்டோக்களை லோகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

இதையும் படியுங்க: திருமணத்திற்கு பின் தினுசு… கிறங்க வைத்த கீர்த்தி சுரேஷ்!!

வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, ஆகஸ்ட் 14ஆம் தேதி ஹிருதிக் ரோஷன் நடிப்பில் வார்2 படம் வெளியாக உள்ளது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி உட்பட பலர் நடிக்கின்றனர்.

Coolie Movie Release Date Postponed

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகத்திற்கு மவுசு அதிகம் என்பதால், வார் 2 படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதனால் கூலி படம் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Coolie Movie Release Date Postponed கூலி படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்… படக்குழு எடுத்த முடிவால் ரசிகர்கள் ஷாக்!!
  • Continue Reading

    Read Entire Article