ARTICLE AD BOX
குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகி வருகிறது. இதனிடையே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று சிங்கிள் பாடல்கள் வெளிவந்தன. இந்த மூன்று பாடல்களுமே பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியுள்ளது.
இதில் குறிப்பாக பூஜா ஹெக்டே நடனமாடிய “மோனிகா” பாடல் இளைஞர்களை கவர்ந்துள்ளது. இதில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடை பலரது கவனத்தையும் குவித்தது. இந்த நிலையில் இப்பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடை குறித்தான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

லட்ச ரூபாய் ஆடை?
“கூலி” திரைப்படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. இது Versace Medusa 95 Grapped என்ற வகையை சேர்ந்த Gown ஆகும். இந்த ஒரு பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருக்கும் ஆடை மட்டும் ரூ.5 லட்சமா? என ரசிகர்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வருகிற ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அதே நாளில் நடைபெறவுள்ளது.
