கூலி புரொமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் எங்க போயிருக்கார் பாருங்க? மீண்டும் அதே இடம்!

1 month ago 15
ARTICLE AD BOX

எகிறும் எதிர்பார்ப்புகள்!

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்திற்கு எங்கு திரும்பினாலும் எதிர்பார்ப்பு அதிகளவு உள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் புரொமோஷன் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. 

“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. துறைமுகத்தை மையமாக வைத்து இத்திரைப்படத்தின் கதையம்சம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 

Lokesh kanagaraj in psg college for coolie promotions

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்!

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தான் படித்த கல்லூரியான கோவை பிஎஸ்ஜி கல்லூரிக்குச் சென்றுள்ளார். அங்கு “கூலி” திரைப்படத்தின் புரொமோஷனுக்காக வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் படித்த வகுப்பறையில் இருந்து ஒரு செல்ஃபி எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் “கற்க தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 28, 2025
  • Lokesh kanagaraj in psg college for coolie promotions கூலி புரொமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் எங்க போயிருக்கார் பாருங்க? மீண்டும் அதே இடம்!
  • Continue Reading

    Read Entire Article