ARTICLE AD BOX
லோகேஷ் கனகராஜ்- ரஜினிகாந்த் காம்போ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
வெளியானது Chikitu பாடல்
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் முதல் சிங்கிள் பாடலான Chikitu பாடல் வெளியாகியுள்ளது. இந்த மியூசிக் வீடியோவில் டி ராஜேந்தர் நடனமாடியுள்ளார். அனிருத் இசையில் இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். டி ராஜேந்தர், அனிருத், அறிவு ஆகிய மூவரும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.