ARTICLE AD BOX
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது.
இயக்குநர் பேரரசு விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் விஜய் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்த அவர் தற்போது விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்க: கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?
இது குறித்து பேசிய இயக்குநர் பேரரசு, தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டது குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார்.
விஜய் தவெக முதலாமாண்டு நிறைவு விழாவில், மேடையில் பிரசாந்த் கிஷோரை அமர வைத்தது தப்பு. தவெகவில் உள்ள கடைசி நிலை தொண்டனை கூட அவர் அமர வைத்திருக்கலாம்.
ஆனால் பிரசாந்த் கிஷோர் கூலிக்கு மாரடிக்கும் ஒரு ஆள். திமுகவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அந்த கட்சிக்காக உழைத்தவர். தற்போது தவெகவிடம் காசை வாங்கிக் கொண்டு பணியாற்ற உள்ளார்.
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கு தவெக, ஒரு இந்திக்கார், பீகாரியனை மேடையில் அமர வைத்தது தப்பு என கூறியுள்ளார். பேரரசுவின் இந்த கருத்துக்கும் பலரும் ஆதரவு கருத்துக்களையே கூறிவருகின்றனர்.