ARTICLE AD BOX
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது கோலிவுட்டில் தினம் தினம் இருவர் குறித்த தகவல் வந்துகொண்டே இருக்கிறது.
மனைவியை பிரிந்து வாழும் ரவி மோகன், பின்னணி பாடகி கெனிஷா உடன் வலம் வருது, இருவரும் காதலித்து வருவதால்தான் மனைவியை பிரிவதாக தகவல் வெளியானது
இதையும் படியுங்க: அஜித், விஜய் படம்னா உடனே போய் நடிக்கணுமா? பிரபல நடிகை பளிச் பதில்!
ஆனால் இதையெல்லாம் மறுத்த ரவி மற்றும் கெனிஷா, நாங்கள் நண்பர்கள் என்று கூறி வருகின்றனர். அண்மையில் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் இருவரும் ஒன்றாக கைகோர்த்து வந்தது கோலிவுட்டில் புதிய புயலை கிளப்பியது.
அன்றே ஆர்த்தி, தனது இன்ஸ்டாவில் ஒரு பெரிய ஸ்டோரி ஒன்று வைத்து, நான் இப்போதும் ஆர்த்தி ரவிதான், நீதிமன்றத்தில் வழக்கு போய்கொண்டிருக்கிறது, இப்போது வரை என் கணவர் தான் ரவி, அதுவரை ஊடகங்கள் பிரித்து எழுத வேண்டாம் என கூறியிருந்தார். மேலும் கெனிஷாவை தாக்கி சில கருத்துகள் இருந்தது.
இதற்கு கெனிஷாவும், பதிலடி கொடுத்திருந்தார். நட்பை தவறாக நினைத்து கதை கட்டி வருகின்றனர். எனக்கும் ரவிக்கும் ஏற்பட்ட பழக்கம், ஆர்த்தியை பிரிந்த பிறகுதான், ரவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு உதவி செய்யதான் நான் வந்தேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகைகள் ராதிகா, குஷ்பு போன்ற சீனியர் நடிகைகள் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராமில், பெண் சிங்கம் ஒன்று தனது இரண்டு குட்டி ஆண் சிங்களை பாதுகாத்து வரும் போட்டோ ஒன்றை பதிவிட்டு, வெளியே தெரியாத ரணங்களால் ஒரு தாய் படும் துயருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், அவள் இந்த போராட்டத்தை அவளுக்காக செய்யவில்லை, அவளுக்கு அளிக்கப்பட்ட சத்தியம் என்ன ஆனது என்ற வாதத்தையே எழுப்பி வருகிறாள் என பதிவிட்டுள்ளார்.