கேக்கிற்கு பதில் பிரியாணியை வெட்டிய விஜய் ஆண்டனி; ஆமைக்கு மரியாதை! என்னப்பா இது?

1 month ago 35
ARTICLE AD BOX

கேக்கிற்கு பதில் பிரியாணி

விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள “சக்தி திருமகன்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்று விஜய் ஆண்டனியின் 50 ஆவது பிறந்தநாள் என்பதால் அத்திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. அதே விழாவில் அவரது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. அப்போது கேக்கிற்கு பதில் பிரியாணியை வெட்டி தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடினார் விஜய் ஆண்டனி. இது பலரின் கவனத்தை குவித்துள்ளது. 

ஆமைக்கு மாலை

விஜய் ஆண்டனி நடிப்பில் இதற்கு முன்பு வெளிவந்த “மார்கன்” திரைப்படத்தில் ஆமை ஒரு முக்கிய பங்கை வகுத்திருந்தது. இதன் காரணமாக “மார்கன்” படத்தின் புரொமோஷன் விழாக்களில் ஆமை பொம்மை இடம்பெற்றிருந்தது. அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  இன்று நடைபெற்ற விழாவில் ஆமை பொம்மைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

vijay-antony-cut-briyani-instead-of-cake

இது குறித்து அவர் பேசியபோது, “ஆமை மீது தேவையில்லாமல் கட்டுக்கதையை கட்டிவிட்டுள்ளார்கள். அதனை மாற்றவே இவ்வாறு செய்கிறேன்” என கூறினார். 

  • vijay-antony-cut-briyani-instead-of-cakeகேக்கிற்கு பதில் பிரியாணியை வெட்டிய விஜய் ஆண்டனி; ஆமைக்கு மரியாதை! என்னப்பா இது?
  • Continue Reading

    Read Entire Article