ARTICLE AD BOX
மன்னிப்பு கேட்க முடியாது
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது” என்று கூறியது கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது. பல கன்னட அமைப்புகள் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் கூறிவிட்டார். இவ்விவகாரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல கன்னட நடிகர்களும் அரசியல்வாதிகளும் கமல்ஹாசனை கண்டித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் கமல்ஹாசனின் பேச்சுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
கேஜிஎஃப் மட்டும் ஓடவைக்கணுமா?
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், இது குறித்து பத்திரிக்கையாளரிடம் பேசியபோது, “தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்துதான் கிளைத்தது என உலகத்திற்கே தெரியும். கமல்ஹாசன் வரலாற்றுப் பூர்வமாகத்தான் அவ்வாறு கூறினார். எந்த ஒரு வரலாற்று ஆய்வாளராலும் இதனை மறுக்க முடியாது.

தமிழர்கள் ஆகிய நாங்கள் எவ்வளவு ஜனநாயகவாதிகள், பேரன்புமிக்கவர்கள். உங்களுடைய கேஜிஎஃப் பார்ட் 1 பார்ட் 2 ஆகிய படங்களை எந்த இடையூறும் இல்லாமல் ஓடவிட்டோமே, அதற்கான பரிசுதானா இது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
