ARTICLE AD BOX
கடலூரில் இன்று காலை செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் சென்றது. செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார்.
அப்போது சிதம்பரம் நோக்கி வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில், பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் படுகாயமடைந்த 2 மாணவர்கள், ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் வரும் போது கேட் மூடப்படாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் கேட் கீப்பர் தூங்கிக் கொண்டிருந்ததால் விபத்து நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்க: திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சரி, நாங்கள் வைத்தால் தவறா? கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!
கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கேட் கீப்பர் கவனக்குறைவே காரணம் என பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
ஓட்டுநர் கேட்டை திறக்க கூறியதால்தான் கேட் றக்கப்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு மாணவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.