ARTICLE AD BOX
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
இதையும் படியுங்க: “WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!
முதற்கட்டமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து 2 வாரங்கள் அங்கு காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.இதன் பின்னர் ECR சாலையில் உள்ள பிரபல படப்பிடிப்பு ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து மீதியுள்ள காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் ரஜினியின் நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேசமயம்,மோகன்லால்,சிவராஜ்குமார்,ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் கேமியோ ரோலும் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது .
இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபலமான நந்தமூரி பாலகிருஷ்ணா இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.முதலில் ஜெயிலர் படத்திலேயே அவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர்,ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை,தற்போது ஜெயிலர் 2 படத்தில் அவரை சேர்க்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.