ARTICLE AD BOX
ஷங்கரின் தோல்வி படம்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான “கேம் சேஞ்சர்” திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.

ரூ.400 கோடிக்கும் மேலான பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் வெறும் ரூ.180 கோடியே வசூல் செய்தது. தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு இது மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது. இத்திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தனக்கு சொந்தமான வீடு ஒன்றை கூட தில் ராஜு விற்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
நான் எடுத்த தவறான முடிவு
தில் ராஜு தற்போது “தம்முடு” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது ஒரு விழாவில் பேசிய தில் ராஜு, “ஷங்கர் போன்ற பிரம்மாண்ட இயக்குனரிடம் நான் இதுவரை பணியாற்றியது இல்லை. அதன்படி நான் ஒரு ரிஸ்க் எடுத்தேன்.

ஆனால் கேம் சேஞ்சர் நான் எடுத்த ஒரு தவறான முடிவு. படம் ஒப்பந்தமான சமயத்திலேயே நான் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கலாம். ஆனாலும் அதனை நான் செய்யவில்லை. சில விஷயங்கள் எனது கைமீறி போய்விட்டது. இனி அப்படிப்பட்ட தவறை நான் செய்யமாட்டேன்” என கூறினார்.
கேம் சேஞ்சர் நான் எடுத்த தவறான முடிவு? கவலையின் உச்சத்தில் தயாரிப்பாளர்! அடப்பாவமே
                  
                        4 months ago
                                59
                    








                        English (US)  ·