ARTICLE AD BOX
விவேகம் சாதனையை முறியடித்த குட் பேட் அக்லி
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே பல சாதனைகளை படைத்து வருகிறது.
இதையும் படியுங்க: சிம்பு வேண்டாம்…SK போடுங்க…அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு.!
சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.வாலி, அமர்க்களம், பில்லா, ரெட் போன்ற அஜித்தின் புகழ்பெற்ற படங்களை நினைவுபடுத்தும் சண்டைக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருந்தது.இதனால், 24 மணிநேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து,தமிழ் திரைப்பட டீசர்களில் ஒரே நாளில் அதிக பார்வைகள் பெற்ற சாதனையை நிகழ்த்தியது.
தற்போது, ‘குட் பேட் அக்லி’ படத்தின் கேரளா வெளியீட்டு உரிமம் ₹6 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.இதன்மூலம்,அஜித் தனது திரைப்பயணத்தில் கேரளாவில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட திரைப்படம் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பு,விவேகம் படம் ₹4 கோடிக்கு விற்பனையாகி இருந்தது.தற்போது இந்த சாதனையை குட் பேட் அக்லி முறியடித்துள்ளது,இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.