ARTICLE AD BOX
கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷாவுக்கு வரும் 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஏமனில் பணிக்காக சேர்ந்தார் கேராளவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா. கடந்த 2017ஆம் ஆண்டில் ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவர் நிமிஷாவால் கொல்லப்பட்டார்.
இதனால் அன்று முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதாவது, கிளினிக் ஒன்றை நிமிஷா ஆரம்பித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, நிமிஷாவின் பாஸ்போர்ட் மஹ்தி கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை எடுக்கலாம் என நினைத்த நிமிஷா, மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். ஆனால் அது ஓவர் டோஸாக மாறி மஹ்தி உயிரிழக்க காரணமாக அமைந்தது.
இதனால் கொலை குற்றச்சாட்டுக்கு ஆளான நிமிஷா, 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நிமிஷா மேல்முறையீடு செய்தும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபரிடம் முறையிடப்பட்டது. ஆனால் அதிபரும் மரண தண்டனையை உறுதி செய்தார்.
பின்னர் மஹ்தி குடும்பத்தினர், நிமிஷா குடும்பத்தினரிடம் இழப்பீடாக பணம் கொடுத்தால் மன்னிக்க தயார் என கூறினர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் நிமிஷா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் தடைபட்டதால் பேச்சுவார்த்தை பாதிக்கப்ப்டடது. வரும் 16ஆம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்ப்டடுள்ளது.
இந்நிலையில், அவரை காப்பாற்ற ஆரம்பித்தில் இருந்தே உதவி செய்து வரும் சமூக பணியாளர் சாமுவேல் ஜேரோம் பாஸ்கரன் என்பவர், இன்னும் அவரை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது, இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.