ARTICLE AD BOX
புரட்சி ழகம் கட்சி தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தி சமீபத்தில் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அவர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தினர்.
டிஜிபி அலுவலகம் அருகே காலணிகளால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு போலீஸ்காரர் இருந்தும் ஒரு பயனில்லை. இந்த சம்பவத்திற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார், போலீசில் புகார் அளித்தால், நிலைமை சரியில்லை, நீங்கள் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள் என கூறுகின்றனர்.
என்னிடம் கத்தி இருந்திருந்தால், விசிகவினரை வெட்டி வீசியிருப்பேன், திருமா நள்ளிரவு 2 மணிக்கு லுங்கியுடன் சுற்றி வருகிறார். அவர் பெசன்ட் நகருக்கு ஆட்டோவில் வருவது தெரியும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் புகார் அளித்தனர். அதில் விசிகவினர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்
இதையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தனர். கைது செய்த போது, ஏர்போர்ட் மூர்த்தி நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்தார். உடனே அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
