கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

2 hours ago 4
ARTICLE AD BOX

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: தற்போது மம்மூட்டி நடித்து வரும் படத்தை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக புதிய கதை ஒன்றை எழுதி வருகிறார் கெளதம் மேனன். இந்தக் கதையில் நடிகர் கார்த்தியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான கதையை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் உடன் இணைந்து எழுதி வருகிறார் கெளதம் மேனன். இதனை முடித்துவிட்டு, கார்த்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் கெளதம். எனவே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

கார்த்தி கையில்: தற்போது கார்த்தி, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இதன் டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு டாணாக்காரன் பட இயக்குநரும், நடிகருமான தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க டேட் கொடுத்துள்ளார் கார்த்தி.

Gautam Vasudev menon

இவ்வாறு தமிழ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து கைதி 2 மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் படம் ஆகியவற்றில் நடிக்க கார்த்தி முடிவு செய்துள்ளார். எனவே, இதனிடையே, கெளதம் மேனன் படத்தில் நடிக்கவுள்ளாரா அல்லது இப்படங்களை முடித்துவிட்டு, கெளதம் மேனன் படத்தை தொடங்குவாரா என்பது விரைவில் தெரிய வரும்.

இதையும் படிங்க: வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

மேலும், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இறுதியாக பரவலான வெற்றியைப் பெற்றது. மேலும், அவர் பல நாட்கள் காத்திருக்கும் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!
  • Continue Reading

    Read Entire Article