ARTICLE AD BOX
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது.
கலர்ஸ் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தமாக தற்போது விஜய் டிவி கைமாற உள்ளது. மேலும் லோகோவை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?
ஏற்கனவே கலர்ஸ் நிறுவனம் பெரும் தொகையை கொடுத்து விஜய் தொலைக்காட்சியை வாங்கியுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனால் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக விஜய் டிவியில் டாக் VJக்களாக இருக்கும் கோபிநாத், மாகாபா ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோரை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மூவரும் ஒட்டுமொத்த விஜய் டிவியை தூக்கி நிறுத்தியவர்கள். நீயா நானா, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உட்பட பல நிகழ்ச்சிகளை உயரத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களை நீக்க முடிவு செய்துள்ளது ரசிகர்களிடையே விமர்சனத்தை குவித்து வருகிறது.
