கொடுத்த வார்த்தையை காப்பாத்தணும்… அது அதிமுக கடமை : மீண்டும் வலியுறுத்தும் தேமுதிக!

1 month ago 35
ARTICLE AD BOX

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை இது ஏற்கனவே 2024 தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான்.

அதிமுக ராஜ்யசபா சீட்டு தேமுதிக கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழி இதற்கு ஏற்ப நாங்கள் பொறுமையாக உள்ளோம் இதற்காக நாங்கள் பதட்டமோ பயமோ வேறு எந்த முடிவு நாங்கள் எடுக்கவில்லை.

இதையும் படியுங்க: கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டா? மர்மப்பையால் பரபரப்பு : தீவிர சோதனை!

பொறுமைக் கடலினும் பெரிது என்று பத்திரிகையாளர்களுக்கு தான் நான் கூறினேன் தவிர அந்த பழமொழி எங்களுக்கு கிடையாது.

திமுக தரப்பில் கூறியபடி கமலுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கியுள்ளனர் அது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம் வார்த்தை தான் முக்கியம். கொடுத்த வார்த்தை மீது முடிவு எடுத்தால் தான் பொதுமக்கள் அவர்களை நம்புவார்கள். 24 தேர்தலிலேயே 5 எம்பி சீட்டுகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் முடிவு செய்யப்பட்ட ஒன்று.

முடிவு எடுத்தபடி ராஜ்யசபா சீட் தேமுதிக தர வேண்டியது அதிமுகவின் கடமை
சொன்ன சொல்லில் உறுதியாக இருந்து தேமுதிகவிற்கு அதிமுக தலைமை அறிவிக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் மீது அவருக்கு நம்பிக்கை வரும்.

இரண்டு நாட்களில் தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர் நாங்கள் எங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுடைய முயற்சிகளுக்கு ஆறு மாதம் எங்களுக்கு தேவை அதனால் தான் கூறுகிறேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எங்களுடைய நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படும்

கட்சி தொடங்கும் போது விஜய் எங்கள் பிடிக்கவில்லை. செந்தூரப்பாண்டி படத்தில் இருந்து எங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி விஜய் வருவார். தேமுதிக மற்றவருக்கு யோசனை கூறக்கூடிய இடத்தில் இல்லை. அதேபோன்று விஜயும் யோசனை பெறக்கூடிய நிலையில் அவர் இல்லை அவருடைய கட்சியை வளர்ப்பது என்பது அவருக்கு தெரியும்.

  • the news that pradeep ranganathan acting in 96 part 2 movie is fake said by director 96 இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதன்?- இயக்குனர் கொடுத்த திடீர் விளக்கம்! 
  • Continue Reading

    Read Entire Article