ARTICLE AD BOX
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நோய் தாக்கம் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கொரேனா பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை, கொரோனா பரவி வந்தாலும், வீரியமற்ற கொரோனா என்பதால் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. முகக்கவசம் அணிவது சிறந்தது என்றாலும் கட்டாயம் இல்லை என அறிவித்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிறன்று தமிழகம் முழுவதும் பொது முடக்கம் – அமைச்சர் மா சுப்பிரமணி என இணையத்தில் போட்டோ வைரலாகி வருகிறது.

இந்த போட்டோ ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு இடையூறு செய்யவே அதிகமாக பரவப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அளித்த விளக்கத்தில், இணையத்தில் வைரலாகி வரும் போட்டோ, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட செய்தியை தற்போது வெளியானது போல தவறான தகவல் பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
