ARTICLE AD BOX
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவர் சொந்தமாக ஈச்சர் வாகனம் வைத்துள்ளார். சொந்தமாக ஈச்சர் வாகனம் வைத்துள்ள இவர் அதில் லோடு ஏற்றி வரும் தொழிலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது ஈச்சர் வாகனத்தில் லோடு ஏற்றி வருவதற்காக கொல்கத்தாவிற்குச் சென்றிருக்கிறார் ராகுல்.
அங்கு அவர் ஒரு தகராறில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த கத்தி குத்தால் காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே மயங்கி உயிரிழந்தார். தற்போது ராகுல் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
