கோடி கோடியாக பணம் கொட்டியும் வாடகை பாக்கி வைத்த யுவன் சங்கர் ராஜா ; போலீசில் பரபர புகார்!

6 months ago 102
ARTICLE AD BOX
yuvan

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6-வது தெருவில் பஷீலத்துல்ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டின் மாத வாடகை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வைப்புத் தொகை 12 லட்சம் ரூபாய் என அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத வாடகையை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் யுவன் சங்கர்ராஜா கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான ரூபாய் 18 லட்சம் வாடகை பணத்தை செலுத்தவில்லை என தெரிகிறது.

இதனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து, மொத்த வாடகை தொகை யான 18 லட்சம் ரூபாயில் 12 லட்சம் ரூபாய் மட்டுமே காசோலையாக வீட்டின் உரிமையாளரிடம் யுவன் சங்கர்ராஜா வழங்கினார்.

மீதமுள்ள 6 லட்சம் ரூபாய், மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை தொகையான 15 லட்சம் ரூபாய் என மொத் தம் 20 லட்சத்திற்கும் மேல் வரை வாடகை பணத்தை கொடுக்கவில்லை.

இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் ஆன்லைன் வாயிலாக யுவன் சங்கர் ராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The station கோடி கோடியாக பணம் கொட்டியும் வாடகை பாக்கி வைத்த யுவன் சங்கர் ராஜா ; போலீசில் பரபர புகார்! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article