ARTICLE AD BOX
பரிதாபங்கள் யூடியூப் சேனல் நடத்தி வரும் கோபி, சுதாகரை மிரட்டி நேற்று தயாரிப்பாளர் சௌத்ரி வீடியோ வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக யூடியூப் கோமாளிகள் என்றும், எங்கள் சமுதாயத்தை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ போட்டுள்ளதாக கூறிய அவர், எங்கள் சமுதாயத்தை அரசியல் தலைவர்கள் தவறாக பேசினால் அரசியல் ரீதியாக கண்டிக்கிறோம்.
ஆனால் உங்களை போன்ற கோமாளிகளுக்கு என்ன வேலை? யூடியூப் நல்ல தளம்.. அதை சரியாக பயன்படுத்துவோர் மத்தியில் உங்களை போன்ற கோமாளிகள் இன்னொரு சமுதாயத்தை தவறாக பேச உங்களுக்கு யார் எலும்பு துண்டுகள் போட்டது, குருபூஜையை பற்றி பேச என்ன தகுதி இருக்கு என காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கபாலி படம் வெளியான போது, சௌத்ரி சர்ச்சையாக பேசியிருந்த வீடியோ ஒன்றை ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Memories:
கபாலி படத்தில்.. கால் மேல் கால் போட்டு ரஜினி உட்காரும் காட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு பா.ரஞ்சித் மன்னிப்பும், ரஜினி வருத்தமும் தெரிவிக்காவிட்டால் போராட்டம் செய்வேன்
– தயாரிப்பாளர் சௌத்ரி எச்சரிக்கை.pic.twitter.com/Fh9wx4UMVv
அதில் கால் மேலே கால் போட்ட உட்காருவேன் என்ற வசனம் எங்கள் சமுதாயத்திற்கு எதிரானது, ரஜினியை வைத்து எங்கள் சமுதாயத்துக்கு எதிராக பா இரஞ்சித் பேசியுள்ளார். இருவரும மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவேன என பேசியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த இந்த வீடியோவையும் நெட்டிசன்கள் இணையத்தில் பறக்க விட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
