கோவில் திருவிழாவுக்கு வந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய கட்டிடத் தொழிலாளி!

3 weeks ago 23
ARTICLE AD BOX

திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கி சின்னான்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

இதையும் படியுங்க: கோவில் திருவிழாவுக்கு கூட்டம் கூடுவது, நாகரிக சமுதாயத்துக்கு நல்லதல்ல.. அமைச்சர் சர்ச்சை பேச்சு!

இதில் கலந்து கொள்வதற்காக வெளியூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த 15 வயது பள்ளி மாணவி தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

மாணவி தனியாக நடந்து சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ராஜபாண்டி(35) என்பவர் மாணவியை தனி அறைக்கு இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி பயத்தால் சத்தமிடவும், அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த மாணவியரின் பெற்றோர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

A schoolgirl who came to the temple festival was sexually harassed.

மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராஜபாண்டியின் குடும்பத்தினரிடம் தட்டிக் கேட்டபோது, நடந்ததை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ராஜபாண்டி(35), மற்றும் அவரது உறவினர்கள் விஜயகுமார், காயத்ரி, சிங்கராஜ், பிரேமலதா உள்ளிட்ட 5 பேர் மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

  • so many accusations on dance master dinesh by dance union members லியோ படத்தில் 35 லட்சம் முறைகேடு? நடன இயக்குனர் தினேஷை கட்டம் கட்டும் டான்சர்கள்? 
  • Continue Reading

    Read Entire Article