ARTICLE AD BOX

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களா நீங்கள்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!
சமீபத்தில், உலகம் முழுவதும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்தது. இத்தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், தடுப்பூசியால் தமிழகத்தில் பின்விளைவு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… விசாரணையில் சிக்கிய தங்கையின் கணவர் : தூத்துக்குடியில் பயங்கரம்!
இது தொடர்பாக கோயம்பேட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை. யாரும் பதற்றப்பட வேண்டாம்.
எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும். தடுப்பூசி போட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறையாத அளவு உடலை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
The station கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களா நீங்கள்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.