கோவை எங்களுடைய கோட்டை.. கருத்துக்கணிப்பை பொய்யாக்கி 10லும் வெல்வோம் : செந்தில் பாலாஜி!

7 hours ago 4
ARTICLE AD BOX

கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது :- தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து மாவட்ட கழகங்களின் சார்பிலும் மிக எழுச்சியோடு பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்ற முடிந்தது.

இன்று காலை தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளில் 3,017 வாக்கு சாவடிகளிலும் மிக எழுச்சியோடு ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வருகிற துரோகங்களை மக்கள் இடத்தில் எடுத்துச் சொல்லி நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்கக் கூடிய சாதனை திட்டங்களை துண்டு பிரசுரங்களாக, மக்கள் இடத்தில் கொடுத்து வீடு தோறும் சென்று மக்களை சந்தித்து மக்களிடம் சாதனை திட்டங்களை எடுத்துக் கூறி வருகிறோம்.

அதில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முயற்சியில் அவர்களை இணைய வைப்பதற்கான முயற்சிகளை சிறப்பாக செய்து வருகிறோம். அதோடு உறுப்பினர் சேர்க்கையும் மிக எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய வாக்காளர்கள் 30 விழுக்காட்டிற்கு மேல் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம். நிச்சயமாக இந்த பயணம் வெற்றிப் பயணமாக அமையும் என்று கூறினார்.

மாவட்டத்தில் 10 சீட்டுகள் ஜெயிப்போம் என கூறினீர்கள், மண்டலத்தில் எத்தனை சீட்டுகள் வெற்றி பெறுவீர்கள் என்ற கேள்விக்கு, மாவட்டத்தில் 10 சீட்டு ஜெயிப்போம் என கூறி இருக்கிறோம். அதேபோல மண்டலத்தின் இடங்களையும் ரிசல்ட் வரும் போது பொறுத்து இருந்து பாருங்கள்.

2026 இல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பயணம் என்பது, தமிழ்நாட்டில் தளபதி என்பதை உறுதி செய்து, வாக்காளர் பெருமக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள்.

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் மக்கள் எவ்வளவு தன்னெழுச்சியோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். இதுதான் தமிழ்நாடின் ஒட்டுமொத்த மகளின் இயல்பு நிலை. முதல்வருக்குதான் முழு ஆதரவு.

பிரபல யூடியூப் கருத்து கணிப்பில், அ.தி.மு.க வுக்கு ஆதரவாக சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு, சாணக்கியா யாருடைய சேனல் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர், அதே போல நான் 2006 இல் இருந்து தேர்தலில் நிற்கிறேன், ஒருமுறை கூட நான் ஜெயிப்பேன் என்று யாரும் கூறியது இல்லை.

கடைசியில் முடியாத பட்சத்திற்கு இழுபறி என சொல்வார்கள். அது அவர்களின் மன நிலையை குறித்தது. எந்த கட்சியை சார்ந்து இருக்கிறார்களோ ? அதற்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளை சொல்வார்கள்.

தமிழ்நாட்டின் முதல்வர் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னையில், சென்ற போது ரோடு ஷோவில் மக்கள் எவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம்.

ஒட்டு மொத்த ஆதரவையும் முதல்வருக்கு மக்கள் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் வெற்றி பெறுவோம் எனக் கூறினார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!
  • Continue Reading

    Read Entire Article