ARTICLE AD BOX
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல்உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர்.
இதையும் படியுங்க: பொறுப்பற்ற முறையில் பேசிய வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!
இதில் 58 பேர் உயிரிழந்தனர், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததனர்.தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, சிலருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டைலர் ராஜா என்பவர் தலைமறைவானார். கடந்த 28 ஆண்டுகள் ஆக தலைமறைவாக பதுங்கி இருந்த சாதிக் ராஜா (எ) டைலர் ராஜாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
 பலத்த பாதுகாப்புடன் அவரை கோவைக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
                        3 months ago
                                45
                    








                        English (US)  ·