ARTICLE AD BOX
கேரளாவைச் சேர்ந்த விஜய நாகராஜ் (41) என்ற பயணி, சுற்றுலாவுக்காக கோவைக்கு வந்தார். பின்னர் சென்னை செல்லும் நோக்கில், கோவை முதல் சென்னை வரை இயக்கப்படும் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் முன்பதிவு ரயிலில் ஏறினார்.
ரயிலில் ஏறிய பிறகு, தனது கருப்பு நிற பையை லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு, தன் இருக்கையில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டு இருந்த, சிறிது நேரத்தில் பை இல்லாததை கவனித்தார்.
அந்த பையில் விலை உயர்ந்த Apple லேப்டாப் மற்றும் Bose ஹெட்ஃசெட் இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து அவர் RailMadad மூலம் புகார் கொடுக்கப்பட்டதும், கோவை ரெயில்வே காதல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த கேரளாவைச் சேர்ந்த சயத் அகமது முபீன் (43) என்ற நபரை பிடித்து, அவரிடம் இருந்து, லேப்டாப், ஹெட்செட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

4 months ago
50









English (US) ·