ARTICLE AD BOX
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷர்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்க: இதுதான் திராவிட மாடலா? தனிநபரின் வணிக வளாக சுவரை புல்டோசர் வைத்து இடித்த திமுக கவுன்சிலர்!!
கடந்த சில மாதங்களாக கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகள் கடும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முன் கூட்டியே வர வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பாதுகாப்பு சோதனைகள் செய்ய நேரம் எடுக்கும் என்பதால், பயணத்திற்கான இறுதி நேரத்தில் பயணிகள் வருவதை தவிர்த்து முன்கூட்டியே வர வேண்டும் எனவும், பாதுகாப்பு சோதனைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

5 months ago
55









English (US) ·