ARTICLE AD BOX
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது நான்கரை வயது குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வரும் தமிழரசி கட்டிட வேலைக்கு சித்தாளாக சென்று வரும் நிலையில் அவருடன் கட்டிட வேலை செய்து வரும் வசந்த் என்பவர் உடன் சில மாதங்களாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அவரது நான்கரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த தமிழரசியை பிடித்து வந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும் அப்போது தான் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் தமிழரசி தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து காவல்துறையினர் தமிழரசி இடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அவர் வசித்து வரும் இருகூர் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

சித்தாளாக வேலை செய்யும் தமிழரசி வீட்டுக்கு அடிக்கடி வசந்த் வந்து போவதும் தெரியவந்தது. மேலும் குழந்தை இடையூறாக இருப்பதால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதும், கொலை செய்து விட்டு இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
2018ல் கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை அதிகளவு கொடுத்து கொலை செய்த குன்றத்தூர் அபிராமிக்கு நேற்று முன்தினம் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கிய நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
