கோவையில் வாங்கிய ஆர்மோனியப் பெட்டி… எமோஷனலாக பேசிய இளையராஜா!!

3 weeks ago 34
ARTICLE AD BOX

கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்வு நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கபட்டது.

இதையும் படியுங்க: மயி* மாதிரி இருக்குது; படம் முழுவதும் மயி*தான்- தக் லைஃப் குறித்து கண்டபடி பேசிய பிரபலம்!

இந்த நிகழ்வில் பேசிய இளையராஜா ,நான் பேச்சாளி கிடையாது, பாட்டாளி என தெரிவித்தார். பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபடுவன் வேலை செய்பவன் , என தெரிவித்த அவர், என் பாடு வேறு, பாட்டாளிகள் அவங்க பாடு வேறு எனவும், என் பாடு பாட்டாகின்றது எனவும் தெரிவித்தார்.

எங்கெங்கோ சிற்றோடைகள் நதியாக ஒடுவதை போல, ஒரு நோக்கத்திற்காக இங்கே அனைவரும் வந்து இருக்கின்றீர்கள் என வந்த விளம்பரதார்களை வரவேற்றார்.பின்பு பேசிய அவர் கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது எனவும், இங்கு ஆர்மோனியம் வசிக்காத இடங்களே கிடையாது எனவும் தெரிவித்தார்.

நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்தது என தெரிவித்த அவர் என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார் எனவும், இப்போது வரை அது என்னிடம் இருக்கின்றது, அதை பயனபடுத்தி வருகின்றேன் என தெரிவித்தார்.

கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என கூட சொல்ல முடியாது, கோவையை நான் பிரிவது கிடையாது எனவும் இசைஞானி இளையராஜா பேசினார். பின்னர் அனைத்து விளம்பரதாரர்களுடன் குழு குழுவாக இளையராஜா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

  • Ilayaraja spoke emotionally about the harmonium box he bought in Coimbatore!! கோவையில் வாங்கிய ஆர்மோனியப் பெட்டி… எமோஷனலாக பேசிய இளையராஜா!!
  • Continue Reading

    Read Entire Article