‘சச்சின்’ ரீ-ரிலீஸில் புது பிளான்…ரெக்கார்ட் பிரேக் சம்பவம் உறுதி.!

6 days ago 11
ARTICLE AD BOX

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சச்சின்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.இதுவரை 68 படங்களில் நடித்த அவர்,தற்போது தனது 69வது படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்,ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் விஜயின் கடைசி திரைப்படமாகும்.

2005ஆம் ஆண்டு கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான ‘சச்சின்’ திரைப்படம், இதில் விஜய்,ஜெனிலியா,ரகுவரன்,பிபாஷா பாசு,வடிவேலு,தாடி பாலாஜி உள்ளிட்டோரின் நடிப்பில் வந்த ஒரு காதல் திரைப்படமாகும்.முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்ட இதில்,விஜய் கல்லூரி மாணவராகவும்,ஜெனிலியா மாணவியாகவும் நடித்திருந்தனர். வடிவேலு ‘அய்யாசாமி’ என்ற காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார்.படம் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றதுடன்,இன்றும் இளைய ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.

இந்த நிலையில் ‘சச்சின்’ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரி-ரிலீஸ் ஆகிறது, படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,படம் வெளியான போது திரையிடப்பட்ட தியேட்டர்களைவிட மிக அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இதற்குக் காரணம் சமீபத்தில் விஜயின் கில்லி ரீ-ரிலீஸ் ஆகி வசூல் சாதனை செய்தது.அதனால்,மற்ற பெரிய படங்கள் வெளியாகாத நாட்களை பயன்படுத்தி,அதிக திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

  • Sachien movie re-release ‘சச்சின்’ ரீ-ரிலீஸில் புது பிளான்…ரெக்கார்ட் பிரேக் சம்பவம் உறுதி.!
  • Continue Reading

    Read Entire Article