ARTICLE AD BOX
லோகேஷ் என்னை வேஸ்ட் பண்ணிட்டார்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான “லியோ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனினும் அத்திரைப்படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என பேச்சுக்கள் அடிபட்டன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்ட சஞ்சய் தத், “நான் லோகேஷ் மேல் கோபமாக இருக்கிறேன். லியோ படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை. அவர் என்னை வேஸ்ட் செய்துவிட்டார்” என ஜாலியாக பேட்டியளித்திருந்தார்.

மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், சஞ்சய் தத் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆன பின்பு சஞ்சய் தத்தே தனக்கு ஃபோன் செய்ததாக கூறினார். “சஞ்சய் தத் எனக்கு ஃபோன் செய்து பேசினார். ‘நான் ஜாலியாகத்தான் அவ்வாறு கூறினேன். ஆனால் அந்த வீடியோ தவறாக பரவி வருகிறது’ என கூறினார். அதற்கு நான், ‘அதனால் ஒன்னும் பிரச்சனை இல்லை சார். நான் ஒன்றும் ஜீனியஸான இயக்குனர் இல்லை. எனது படங்களில் நான் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். எல்லாம் கற்றுக்கொள்வதுதானே’ என்று சொன்னேன்” என அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் தனது தவறுகளை ஒப்புக்கொள்வது சிறந்த குணம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
