ARTICLE AD BOX
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துலிங்கபுரத்தைச் சேர்ந்த மதன் குமார், தனது சகோதரி மற்றும் அவரது இரண்டரை வயது மற்றும் ஒரு வயது கைக்குழந்தைகளுடன் மதுரையிலிருந்து தனியார் பேருந்து மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மதன் குமார், தனது மடியில் இரண்டரை வயது குழந்தையுடனும், அவரது சகோதரி ஒரு வயது குழந்தையுடனும் பயணித்தார்.
பேருந்து மீனாட்சிபுரம் விலக்கு அருகே வந்தபோது, ஓட்டுநர் திடீரென சடன் பிரேக் போட்டார்.இதனால் நிலை தடுமாறிய மதன் குமார், இரண்டரை வயது குழந்தையுடன் பேருந்துக்குள் விழுந்தார். அதே நேரத்தில், அவரது சகோதரியின் மடியில் இருந்த ஒரு வயது குழந்தை கையைவிட்டு தவறி, பேருந்துக்கு வெளியே சாலையில் விழுந்தது.
அருகில் இருந்த பயணிகள் உடனடியாக குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.அதிர்ஷ்டவசமாக, இரு குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், மதன் குமாருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
SUDDENசடன் பிரேக் போட்ட டிரைவர்… பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தை பகீர் காட்சி.. காயத்துடன் உயிர் தப்பிய குழந்தை#Trending | #viralvideo | #Bus | #Accident | #CCTV | #updatenews360 pic.twitter.com/tNvwQGINPe
— UpdateNews360Tamil (@updatenewstamil) August 1, 2025இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
