ARTICLE AD BOX
சசிக்குமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அறிமுக இளம் இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறார். ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகிறது. தற்போது வரை பல தியேட்டர்களில் இந்த படத்தை எடுக்காத நிலையில், வசூலிலும் சாதனை படைத்து கூருகிறது.
இதையும் படியுங்க: அப்பா சத்யராஜ் காலில் விழுந்து கெஞ்சி அழுதேன்… காதலுக்காக போராடுங்கள் என திவ்யா உருக்கம்!
இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், இளங்கோ குமரவேல் என பலரும் நடித்த நிலையில், அத்தனை கதாபாத்திரங்களுக்கும் இயக்குநர் கொடுத்த முக்கியத்துவம் கிளாப்ஸை அள்ளுகிறது.

படத்தை பார்த்த பிரபலங்களும் வாழ்த்துகளை கூறினர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ராஜமௌலி போன்றோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இதுவரை செய்த வசூல் நிலவரம் என்னவென்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. அதன்படி மக்கள் ஆதரவோடு டூரிஸ்ட் ஃபேமிலி உலகளவில் இதுவரை ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
