ARTICLE AD BOX
டாப் நடிகர்
அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட வேண்டும் என நினைப்பவர்கள் உண்டு. ஆனால் விஜய் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒரு பிரபல தொகுப்பாளினி அஜித் படத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பை மறுத்துள்ளார். அதற்கான காரணத்தை குறித்து ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

வேதாளம்
அஜித்குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “வேதாளம்”. இதில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். முதலில் இந்த ரோலில் நடிக்க தொகுப்பாளினி திவ்யதர்ஷினையைத்தான் அணுகினார்களாம். ஆனால் அந்த சமயத்தில் திவ்யதர்ஷினிக்கு கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாம். ஆதலால் தனக்கு வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

ஆனால் தனக்கு அஜித்குமாரின் தங்கை கதாபாத்திரத்திற்கான வாய்ப்புத்தான் வந்திருக்கிறது என்று முதலில் தெரியாதாம். படம் வெளியான பின்புதான் அந்த கதாபாத்திரம் குறித்து தெரியவந்ததாம். இவ்வாறு அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.