சந்தானத்தை ஓரமாக தள்ளிவிட்டு ஓவர் டேக் செய்த சூரி? வசூல் வேட்டையாடிய மாமன்!

2 days ago 11
ARTICLE AD BOX

சந்தானம் VS சூரி

சந்தானம், சூரி ஆகிய இருவரும் தொடக்கத்தில் காமெடி நடிகர்களாக சினிமாவில் ஜொலித்தவர்கள். அதன் பின் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்க சூரி “விடுதலை” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 16 ஆம் தேதி சந்தானத்தின் “டிடி நெக்ஸ்ட் லெவல்” சூரியின் “மாமன்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்தன. 

maaman movie beat dd next level in collection wise

இதில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இன்னொரு பக்கம் “மாமன்” திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. 

ஓவர்டேக் செய்த சூரி

maaman movie beat dd next level in collection wise

“டிடி நெக்ஸ்ட் லெவல்”, “மாமன்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் ரூ.21 கோடிகளே வசூல் செய்துள்ளது. ஆனால் சூரியின் “மாமன்” திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.40 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது. இதன் மூலம் சந்தானம் படத்தை ஓரங்கட்டி வசூல் வேட்டையில் சூரியின் படம் சூறாவளி போல் வசூலை அள்ளிச் சென்றுள்ளது தெரிய வருகிறது. 

  • maaman movie beat dd next level in collection wise சந்தானத்தை ஓரமாக தள்ளிவிட்டு ஓவர் டேக் செய்த சூரி? வசூல் வேட்டையாடிய மாமன்!
  • Continue Reading

    Read Entire Article