ARTICLE AD BOX
STR 49
“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் ஹீரோ கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளிவந்தது. சந்தானம் பல ஆண்டுகள் கழித்து வேறொரு ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் காமெடி ரோலில் நடிப்பதாக இருந்ததால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகளும் அதிகமானது.
ஆனால் இத்திரைப்படத்தை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கினார். இவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் இவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலால் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இதனிடையே சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகிவுள்ளார் எனவும் வருகிற ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிம்புவின் 49 ஆவது திரைப்படம் வெற்றிமாறனிடம் கைமாறியுள்ளது.
சந்தானம் போட்ட கண்டிஷன்?
ஆனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் ட்ராப் ஆனதற்கு ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கியது ஒரு காரணம் என கூறப்பட்டாலும் இத்திரைப்படம் ட்ராப் ஆனதற்கு வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது சந்தானம் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் சிம்புவுக்கு நிகராக தன்னுடைய கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என பல கண்டிஷன்கள் போட்டாராம். இது சிம்புவுக்கும் சந்தானத்திற்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தியதால்தான் இந்த பிராஜெக்ட் ட்ராப் ஆனதாக ஒரு தகவல் வெளிவருகிறது.