ARTICLE AD BOX
வேள்பாரி விழாவில் ரஜினிகாந்த்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு “வேள்பாரி” வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். சு.வெங்கடேசன் எம்பி எழுதிய “வேள்பாரி” நாவல் 1 லட்சம் பிரதிகள் விற்றுள்ள நிலையில் விகடன் சார்பாக வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த் வேள்பாரி நாவல் குறித்தும் அவர் தனது வாழ்வில் படித்த புத்தகங்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ஆச்சரியப்படுத்திய ரஜினிகாந்த்
இந்த நிலையில் தற்போது ஒரு பிரபலமான எழுத்தாளரின் நாவலை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அதாவது பிரபல நாவலாசிரியர் அமீஷ் எழுதிய “The Chola Tigers; Avengers of Somnath” என்ற நாவலை இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்த் இவ்வாறு தொடர்ந்து இலக்கியம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். மேலும் ரஜினிகாந்த் தனது சுய சரிதை ஒன்றையும் எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.
