ARTICLE AD BOX
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின் குடும்பம் போட்ட கண்டிஷன் தான்.
இனி படத்தில் நடிக்க கூடாது, குடும்பம், குழந்தை என செட்டில் ஆக வேண்டும் என கறார் காட்டியதுதான். சமந்தாவை காதலிக்கும் போதே, திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு தடையாக இருக்க மாட்டேன் என கூறிய நாகசைதன்யா மாறினார்.
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரிவு விவாகரத்தல் முடிந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது சமந்தாதான். தொடர்ந்து அரிய வகை நோய், தந்தையின் மரணம் என கவலையில் பிடியில் இருந்தார்.
ஆனால் நாக சைதன்யாவோ நடிகை சோபிதாவை காதலித்தார்.வீட்டு சம்மதத்துடன் கடந்த வரும் டிசம்பர் மாதம் திருமணமும் நடந்தது. திருமணத்திறகு பின் நாகர்ஜூனா குடும்பம் சோபிதாவை தலையில் தூக்கி கொண்டாடி வருகிறது.

ஆனால் சமந்தாவுக்கு விதித்தது போல சோபிதாவுக்கு எந்த கண்டிஷனும் போடவில்லையாம். இதனால் தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வரும் சோபிதா, பா ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
சோபிதாவுக்கு ஒரு நியாயம் சமந்தாவுக்கு ஒரு நியாயமா என ரசிகர்கள் நாக சைதன்யாவை கடுமையாக விளாசி வருகின்றனர்.
