ARTICLE AD BOX
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தற்போதைய இணை அமைச்சருமான எல்.முருகன் இது குறித்து பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
சென்னை கே கே நகரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சேவைகள் மற்றும் பிரதம மந்திரி திவ்யாஷா சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “SC/ST மாணவர்கள் படிக்கின்ற விடுதியை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்திருக்கிறார் முதல்வர். நான் அவரிடம் கேட்கிறேன். அவர் எதாவது ஒரு விடுதிக்குச் சென்று பார்த்திருக்கிறாரா? அந்த விடுதிகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்.
SC/ST விடுதியில் ஒரு மாணவர் படிக்கிறார் என்றால் அதை விட கொடுமையான ஒன்று வேறு எதுவும் இல்லை. அது போன்ற விடுதியில் பெயரை மட்டும் மாற்றினால் சரியாகிவிடுமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “பாஜக ஆட்சி செய்கின்ற மத்திய பிரதேசத்தில் SC/ST விடுதியை பார்த்துவிட்டு வாருங்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.

3 months ago
43









English (US) ·