ARTICLE AD BOX
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்க: கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!
இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 500 ரூபாய்க்கு விற்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் உயர்ந்து ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதர வகை சிலிண்டர் விலை ரூ.803ல் இருந்து 853 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளார்.
காலையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை உயருமோ என வாகன ஓட்டிகள் கவலகைகுள் ஆகினர்

ஆனால் மாலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது சாமானிய மக்களுக்கு அடுத்த சுமையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாக பரவலான கருத்துகள் பரவி வருகிறது.
