சம்பள பாக்கி வைத்த நிறுவனம்.. பெண் தூய்மைப் பணியாளர் விபரீத முடிவு!

4 hours ago 4
ARTICLE AD BOX

சென்னையில், வேலை செய்ததற்கான சம்பள பாக்கி தராமல் இழுத்தடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக HR மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: சென்னையின் வியாசர்​பாடியைச் சேர்ந்​தவர் சுமதி(37). இவர் தூய்மைப் பணியாளர் ஆவார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் தி.நகர் பிர​காசம் தெரு​வில் உள்ள தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பணி​யமர்த்​தப்​பட்​டார். ஆனால், பணியில் சேர்ந்த சில நாட்​களி​லேயே பெண் பணி​யாளர் வேண்​டாம், ஆண் பணி​யாளர்​தான் வேண்டும் என நிர்​வாகம் முடி​வெடுத்​துள்ளது.

எனவே​, சுமதி பணியி​லிருந்து நிறுத்​தப்​பட்​டுள்ளார். ஆனால், அவர் பணி செய்த நாட்களுக்​கான சம்​பளம் கொடுக்​கப்​ப​டா​மல் தொடர்ந்து இழுத்​தடிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பலமுறை கேட்​டும் சும​திக்​கான நிலுவைச் சம்பளம் கொடுக்​கப்​பட​வில்​லை. இதனால் விரக்தி அடைந்த அவர், கடந்த மார்ச் 4ஆம் தேதி மாலை, சம்​பந்​தப்​பட்ட அலுவலக நுழை​வாயி​லில் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டுள்ளார்.

Arrested

இதனால் உடல் முழு​வதும் பலத்த தீக் காயத்​துடன் கீழ்பாக்​கம் அரசு மருத்துவமனையில் சுமதி அனு​ம​திக்​கப்​பட்டுள்ளார். பின்னர், மார்ச் 13ஆம் தேதி உயிரிழந்​துள்ளார். இதனையடுத்து, இந்த விவ​காரம் தொடர்​பாக தேனாம்​பேட்டை போலீ​சார் விசா​ரித்து வந்​தனர்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்..!!

இந்த ​நிலை​யில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனி​யார் நிறுவன மனிதவள மேலாண்மை மேலா​ள​ரான பழைய பெருங்​களத்​தூரைச் சேர்ந்த பிரீத்தி (40) என்​பவர் கைது செய்​யப்​பட்​டுள்ளார். முன்னதாக டெல்லி சென்​றிருந்த அவரை அங்கு சென்று போலீ​சார் கைது செய்​தனர்.

  • Coolie Movie Release Date Postponed கூலி படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்… படக்குழு எடுத்த முடிவால் ரசிகர்கள் ஷாக்!!
  • Continue Reading

    Read Entire Article