சரத்குமாரின் மகளுக்கு அடித்தது ஜாக்பாட்? ஹாலிவுட்டில் களமிறங்கும் நடிகை வரலட்சுமி!

5 days ago 11
ARTICLE AD BOX

வரலட்சுமி சரத்குமார்

“போடா போடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் வரலட்சுமி சரத்குமார். அதனை தொடர்ந்து “தாரை தப்பட்டை”, “விக்ரம் வேதா” போன்ற பல திரைப்படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகராக ஜொலித்தார். அதனை தொடர்ந்து ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துபோனது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிசியாக வலம் வந்தார். 

sarathkumar daughter varalakshmi sarathkumar entering in to hollywood

இதனை தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு நிகோலய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது தமிழில் “ஃபீனிக்ஸ்”, “ஜனநாயகன்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டிற்குள் நுழையவுள்ளார்.

ஹாலிவுட் பட வாய்ப்பு

sarathkumar daughter varalakshmi sarathkumar entering in to hollywood

பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் நடிக்கும் “Rizana a caged bird” என்ற திரைப்படத்தின் மூலம் வரலட்சுமி ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை சந்திரன் ருட்னம் என்பவர் இயக்குகிறார். இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டு அரேபிய நாட்டில் கொல்லப்பட்ட ரிஸானா என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிறது. இத்திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த சுமதி ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. 

  • sarathkumar daughter varalakshmi sarathkumar entering in to hollywood சரத்குமாரின் மகளுக்கு அடித்தது ஜாக்பாட்? ஹாலிவுட்டில் களமிறங்கும் நடிகை வரலட்சுமி!
  • Continue Reading

    Read Entire Article