ARTICLE AD BOX
சரத்குமார்-நக்மா காதல்?
சரத்குமார் நக்மா ஆகியோர் ஜோடியாக இணைந்து “ரகசிய போலீஸ்”, “ஜானகிராமன்”, “அரவிந்தன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர். அந்த சமயத்தில் இவர்களுக்குள் காதல் பற்றிக்கொண்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. நக்மாவை சரத்குமார் சில காலம் கட்டுப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டது. நக்மா எப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும்? என அவர்தான் முடிவு செய்தாராம். நக்மா கிளாமராக நடிக்க கூடாது என்று கண்டிஷனும் போடுவாராம்.

இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் அந்த சமயங்களில் வலம் வந்தன. இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசஃப் சரத்குமார்-நக்மாவின் காதலை குறித்தும் இடையில் பாக்யராஜ் நுழைந்தது குறித்தான ஒரு தகவலையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பாக்யராஜ் படத்தில் நக்மா?
“1990களில் சரத்குமாரும் நக்மாவும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கள் வலம் வர தொடங்கின. அந்த சமயத்தில் பாக்யராஜின் வேட்டியை மடிச்சி கட்டு படத்தில் நக்மா ஒப்பந்தமாகியிருந்தார். சரத்குமார் நக்மாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பாக்யராஜ் படத்தில் நடிக்கவேண்டாம், கிளாமராக இருக்கும் என்று சொல்லிப்பார்த்தார்.

ஆனாலும் நக்மா பாக்யராஜ் படத்தில் நடித்தார். படப்பிடிப்பில் காதல் காட்சிகளை படமாக்கும்போதெல்லாம் சரத்குமார் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிடுவார். சரத்குமாரின் குடைச்சல் தாங்க முடியாமல் அந்த படத்தின் படப்பிடிப்பை பாக்யராஜ் பம்பாய்க்கு மாற்றிவிட்டார். அங்கே பாக்யராஜும் நக்மாவுடன் ஜல்சா கூட செய்தார். பம்பாயில் படப்பிடிப்பு நடத்தியதால் பாக்யராஜ்ஜிற்கு செலவு அதிகமானது. நக்மாவுக்காகத்தான் அவ்வளவு செலவையும் தாங்கிக்கொண்டார்.

அந்த சமயத்தில் சரத்குமாருக்கும் நக்மாவுக்கும் இடையே இருந்த காதலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதுவரை நக்மாவுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த சரத்குமார் குடைச்சலாக ஆகத்தொடங்கினார். இதனால் நக்மா தனது சொந்த ஊரான பாம்பேக்கே திரும்பி விட்டார்” என்று சபிதா ஜோசஃப் அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். இவரது பேட்டி ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
