சரிகமப ஆடிஷனில் பிரபல நடிகையின் மகள்… மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பிரபலம்!!

1 month ago 40
ARTICLE AD BOX

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோக்கள் நிறைய இருந்தாலும், சரிகமப நிகழ்ச்சி தனி ரசிகர்கள் படை உண்டு. காரணம், உலகம் முழுவதும் உள்ள இசை பிரியர்கள் தங்கள் குரலை உலகுக்கு அறிமுகப்படுத்து சரிகமபவை தேர்வு செய்வர்.

இதையும் படியுங்க: விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதலை உறுதிபடுத்திய புகைப்படம்? இப்படி பச்சையா மாட்டிக்கிட்டீங்களே!

குரலுக்கான சிறந்த அங்கீகாரத்தை வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், பாடகர்கள் விஜய் பிரகாஷ், ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மேனன், டி ராஜேந்தர் போன்றோர் நடுவர்களாக உள்ளனர்.

கடந்த முறை கிராமத்தில் இருந்து வந்த ஏழை பள்ளி மாணவி யோகா ஸ்ரீ குரலும், கூலி தொழிலாளியின் மகன் திவினேஷ் குரலும் ஓங்கி ஒலித்தது. உலகம் முழுக்க பரவி, மக்கள் மனதை வென்றனர்.

Devayani Daughter Iniya Participated in Saregamapa

சரிகமப சீசன் 4 முடிந்ததும், உடனே 5வது சீசனும் தொடங்கிவிட்டது. தற்போது ஆடிஷன் நடந்து வருகிறது. இதிலும் பல்வேறு கிராமத்தில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் போடியாளர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நடிகை தேவயானி இளையமகள் இனியா ஆடிஷனுக்காக வந்து பாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மயில் போன பொண்ணு ஒண்ணு பாடலை அழகாக பாடிய தேவயானி மகளை பார்த்து ஆச்சரியப்பட்ட நடுவர்கள், நீங்கள் இந்த மேடையை ஏன் தேர்வு செய்தீர்கள் என கேட்க, அதற்கு கண்ணீர் விட்டு தேவயானி அழுத வீடியோக்களை ஜீ தமிழ் பிரோமோவாக ஒளிபரப்பியுள்ளது. இந்த வாரம் இந்த எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. மேலம் ஒரு போட்டியாளர் ஆடிஷனில் கலந்து கொண்டு, தனது அண்ணன் தான் காரணம் என திருநங்கை ஒருவரை அழைத்து வந்த வீடியோ காண்போரை கண்ணீர் வரவைத்துள்ளது.

  • Famous actress' daughter breaks down in tears on stage at Saregamapa audition சரிகமப ஆடிஷனில் பிரபல நடிகையின் மகள்… மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பிரபலம்!!
  • Continue Reading

    Read Entire Article