ARTICLE AD BOX
தமிழ் திரையுலகின் 17 வருடமாக நாயகியாக கோலோச்சியவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. 1958ல் தமிழில் அறிமுகமான கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி, பின்னர் 1959ல் கல்யாண பரிசு படத்தில் நடித்தார்.
நாடோடி மன்னன் படம் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிய அவர், தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அனைத்து முன்னணி நடிகருடன் நடித்தார்.
காலையில் எம்ஜிஆர் படத்தில் நடிக்க சென்ற சரோஜா தேவி, மாலையில் சிவாஜியுடன் நடிப்பார். அப்படி பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
இதையும் படியுங்க: கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி காலமானார்… 17 வருடம் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகி!
ஒரு படத்தில் கமிட்டாகி விட்டால் அடுத்த படத்தில் கமிட்டாகாத நடிகைகள் மத்தியில், ஒரு படத்தில் நடத்துக் கொண்டே மற்றொரு படத்தில் நடித்து வருவாராம். அப்படி ஒரே நேரத்தில் 30 படங்களில் நடித்துள்ளார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனக்கச்சிதமாக பொருந்தக்கூடிய சரோஜா தேவி, ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். அந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையும் இவரே.
தமிழில் கடைசியாக 2008ல் வெளியான ஆதவன் படத்தில் நடித்த சரோஜா தேவி, கன்னடத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான நாதசார்வபௌமா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வென்ற சரோஜா தேவி பல மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார். வயது மூப்பு காரணமான தன்னுடைய 87 வயதில் பெங்களூருவில் இன்று காலமானார்.
பழைய பேட்டி ஒன்றில் பேசிய சரோஜா தேவி, ஜெயலலிதா உடனான நட்பு குறித்து பேசியிருந்தார். அதில், ஜெயலலிதா முதலமைச்சரான பின்பும் கூட என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதிக முறை ஜெயலலிதாவை நேரில் சந்தித்துள்ளேன், என்னோடு நல்ல முறையில் பழகுபவர், ஒரு நாள் என்னை அழைத்து பேசிய அவர், அதிக முறை புதிய பறவை படத்தை பார்ப்பேன். எனக்கு ரொம்ப பிடித்த படம் என கூறியுள்ளார்.
மேலும் நீங்க டாப்ல இருக்கீங்க, எப்போதும் போல இப்படியே இருங்க, எந்த காரணத்திற்காகவும் கீழ இறங்காதீங்க, சின்ன சின்ன ரோல் எல்லாம் வந்தால் ஒத்துக்காதீங்க, இப்போ எப்படி இருக்கீங்களோ, கடைசி வரைக்கும் அப்படி இருங்க என ஜெயலலிதா கூறியதாக சரோஜா தேவி பகிர்ந்துள்ளார்.