ARTICLE AD BOX

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளவரசு(45), இவர் நேற்று இரவு ஓட்டலில் இருந்தபோது போதையில் வந்த மூன்று பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர்
உணவு சாப்பிட்டு முடித்த பின்பு பணம் கொடுக்க மறுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு இளவரசுவை கத்தியால் வெட்டிவிட்டு கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சாய்கனேஷ் வெட்டுக்காயம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் இளவரசுவை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார்(23), அவரது நண்பர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்(25), முத்து(30), என்பது தெரியவந்தது இவர்கள் மூன்று பேரும் செம்பரம்பாக்கம் சுடுகாடு பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசாரை தப்பியோட முயன்றபோது பற்றி போலீசார் மடக்கி பிடித்ததில் மூன்று பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது சசிகுமார் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வரும் நிலையில் நேற்று இரவு மூன்று பேரும் குடிபோதையில் ஓட்டல் உரிமையாளரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றபோது நூம்பல் பகுதியில் நடந்து சென்ற வட மாநில வாலிபரை வெட்டி அவரிடம் செல்போனை பறித்துள்ளனர்.
அதேபோல் தாம்பரம் – மதுரவாயல் பைபாசில் சென்ற போது அம்பத்தூரில் வந்த நபரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் அம்பத்தூரில் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் சென்றவர்களை கத்தியால் வெட்டிவிட்டு வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே இரவில் மூன்றுக்கும் மேற்பட்டோரை வெட்டிவிட்டு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை வெட்டிவிட்டு தப்பி சென்றபோது வழியில் கிடைத்தவர்களை எல்லாம் வெட்டி விட்டு வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களிடமிருந்து கத்தி, ஐந்து செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
The station சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு.. ஒரே இரவில் டுவிஸ்ட்!! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.