ARTICLE AD BOX
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை.
இவர் உருவாக்கிய ஆல்பங்கள் எல்லாமே பயங்கர ஹிட் அடித்தது. இவரே இசையமைத்து இவரே பாடி, இவரே நடிக்கவும் செய்தார்.
இதையும் படியுங்க : இரண்டாவது திருமணம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : விளாசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!!
கட்சி சேரா பாடல் உலகம் முழுவதும் தீயாய் பரவியது. அதில் இருந்தே சாய் அபயங்கர் ஆல்பங்களுக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தனர்.
இதனிடையே சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் 45வது படத்துக்கு சாய் அபயங்கர் கமிட் ஆனார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக அனிருத்துக்கு கடும் போட்டியாக விளங்குவார் என கூறப்பட்டது.

இப்படியிருக்கையில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் புதியதாக உருவாக உள்ள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் தமிழ் இயக்கிய டாணாக்காரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்க உள்ள படத்திற்கு தற்காலிகமாக கார்த்தி 29 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சாய் அபயங்கர் இணைந்துள்ளார்.
படத்துக்கான போஸ்டரும் வெளியான நிலையில், நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
